மதுரை மாவட்டம் மேட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் யோகேஸ்வரன். இவர் கல்குவாரியில் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். அங்கு ஜேசிபி ஓட்டுநராக வேலை பார்க்கும் ராஜேஷ் என்பவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

ராஜேஷுக்கு அவரது மனைவி உணவு கொடுப்பதற்காக கல்குவாரிக்கு சென்ற போது யோகேஸ்வரனுடன் அறிமுகம் கிடைத்தது. பின்னர் இருவரும் இன்ஸ்டாகிராமில் பழகி அடிக்கடி தனிமையில் உல்லாசமாக இருந்தனர். இதனை அறிந்த ராஜேஷ் யோகேஸ்வரனையும், தனது மனைவியும் கண்டித்துள்ளார்.

சம்பவம் நடந்த அன்று ராஜேஷுக்கும் யோகேஸ்வரனுக்கும் இடையே கல்குவாரியில் வைத்து வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் கோபமடைந்த ராஜேஷ் கட்டையால் யோகேஸ்வரனின் தலையில் பலமாக அடித்தார். இதனால் அலறி துடித்த யோகேஸ்வரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று யோகேஸ்வரனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் ராஜேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.