தமிழகத்தில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் 108 இடங்களை கைப்பற்றியுள்ள நிலையில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் இருப்பதால் ஆட்சி அமைக்க முடியவில்லை. இதன் காரணமாக திமுக கூட்டணி கட்சிகளிடம் நடிகர் விஜய் ஆதரவு கேட்ட நிலையில் காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் இருந்து வெளியே வந்து தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு கொடுத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து தற்போது மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளும் தமிழக வெற்றி கழகத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவதாக அறிவித்தது. ஆனால் தமிழக வெற்றி கழகத்தின் அமைச்சரவையில் நாங்கள் பங்கு பெற மாட்டோம் எனவும் வெளியில் இருந்து மட்டும்தான் ஆதரவு கொடுப்போம் எனவும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் மூத்த தலைவர்கள் ஒன்றாக செய்தியாளர்களை சந்தித்து பேட்டி கொடுத்தனர்.

அதன்படி கொல்லைபுரமாக பாஜகவின் ஆட்சியை தடுக்கவே இந்த முடிவு எடுத்துள்ளதாகவும் இனியாவது ஆளுநரை எதிர்த்து விஜய் பேச வேண்டும் எனவும் மதச்சார்பின்மை மற்றும் தமிழகத்தின் உரிமைகளுக்காக பாஜகவை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும் எனவும் வீரபாண்டியன் கூறியுள்ளார்.

மேலும் தமிழக வெற்றிக்கழகத்துடன் கூட்டணி இல்லை எனவும் மக்கள் நலன் சார்ந்த பிரச்சினைகளில் திமுகவுடன் தான் என்றென்றும் பயணிப்போம் எனவும் பெ. சண்முகம் மற்றும் வீரபாண்டியன் திட்டவட்டமாக கூறிவிட்டனர். தமிழக வெற்றிக்கழகம் ஆட்சி அமைக்க கூடாது என முதல்வர் ஸ்டாலின் எந்த இடத்திலும் கூறவில்லை எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.