மயிலாடுதுறையில் ஆளுநருக்கு எதிர்ப்புத் தெரிவித்துப் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர் மீது, கூட்டணி கட்சியான திமுகவினர் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவத்தைக் கடுமையாகச் சாடியுள்ள கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, “ஜனநாயக ரீதியாகப் போராடிய காங்கிரஸ் தொண்டர்களை திமுகவினர் தாக்கியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது” என ஆவேசமாகத் தெரிவித்துள்ளார். கூட்டணி என்றாலும் கொள்கை ரீதியான போராட்டங்களுக்குத் தடை விதிப்பதும், வன்முறையில் ஈடுபடுவதும் ஏற்க முடியாத ஒன்று என அவர் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தத் தாக்குதல் தொடர்பாகக் காவல்துறை உடனடியாக உரியப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, வன்முறையில் ஈடுபட்டவர்களைக் கைது செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இந்த மோதல் போக்கால் மாவட்ட அளவில் திமுக – காங்கிரஸ் இடையே விரிசல் ஏற்பட்டுள்ளதா என அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளனர்.

“>