தேமுதிக கட்சியின் நிறுவனரும் மறைந்த கேப்டன் விஜயகாந்தின் மகனுமான விஜய பிரபாகரன் தற்போது தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். அதிமுக கூட்டணியில இருந்த தேமுதிக கடந்த தேர்தலில் திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணியில் இணைந்து போட்டியிட்டது.

ஏற்கனவே ஒரு மாநிலங்களவை எம்பி பதவியை தேமுதிக வாங்கிய நிலையில் 10 தொகுதிகள் சட்டப்பேரவை தேர்தலில் ஒதுக்கப்பட்டது. ஆனால் பிரேமலதா விஜயகாந்த் மட்டும்தான் தேர்தலில் வெற்றி பெற்றார். இந்த நிலையில் தமிழகத்தில் நடிகர் விஜயின் கட்சியை 108 இடங்களை பிடித்து பெரும்பான்மையின் நிரூபிக்க முடியாத காரணத்தினால் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளது. இதனை தற்போது விஜய பிரபாகரன் இதனுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி போட்டு விமர்சித்துள்ளார்.

https://www.instagram.com/stories/vijayaprabhakaran_vjp/3891837465472875042?utm_source=ig_story_item_share&igsh=YzQ0czlmZWJlaWJs

அதில் தான் பேசிய ஒரு பழைய வீடியோவை பகிர்ந்து காங்கிரஸ் துரோகிகளுடன் கூட்டணி வைத்த விஜய்க்கு வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார். மேலும் காங்கிரஸ் திமுக கூட்டணியில் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்ட தேமுதிக தற்போது விஜய் இவ்வாறு விமர்சித்துள்ளது தமிழக வெற்றிக்கழகத்தினர் மத்தியில் கோபத்தை ஏற்படுத்திய நிலையில் அவருக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.