விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூரில் ராமலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 10 வருடங்களாக சாத்தூர் மெயின் பஜாரில் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று மின்கசிவு காரணமாக மளிகை கடை மாடியில் இருக்கும் குடோனில் தீ விபத்து ஏற்பட்டது.

இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குடோனில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். ஆனால் இந்த தீ விபத்தில் 30 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மளிகை பொருட்கள் எரிந்து நாசமானது. இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.