தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு வளிமண்டல சுழற்சி காரணமாக தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்தது. இடைவிடாத பெய்த கன மழையால் நீர்நிலைகள் நிரம்பி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வீடுகளுக்குள் புகுந்ததால் மக்கள் வெள்ளத்தில் தத்தளித்தார்கள். இதன் காரணமாக தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டத்திற்கு ஒரு வாரத்திற்கு மேலாக விடுமுறை அளிக்கப்பட்டது.

தற்போது வரை மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று தான் வருகிறது. இந்த நிலையில் வர இருக்கும் அரசு விடுமுறை நாட்கள் அரசு ஊழியர்களுக்கு பொருந்தாது என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மீட்புப்பணிகள் நடந்து கொண்டிருக்கும் வேளையில் அரசு ஊழியர்களுடைய பணி அவசியமென்பதால்  இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.