அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு என்பது மிகவும் பிரபலமான ஒரு வீர விளையாட்டு. தமிழருடைய வீரத்தை நிலைநாட்டும் ஒரு விளையாட்டாக இருக்கிறது. வருடம் தோறும் ஜல்லிக்கட்டு போட்டி பொங்கல் பண்டிகை சமயத்தில் நடத்தப்பட்டு வருகிறது. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வாடிவாசலில் நடத்தப்படுவது வழக்கம். ஆனால் பார்வையாளர்கள் மற்றும் வீரர்களுக்கு எந்த வித ஒரு பாதிப்பும் ஏற்படாமல் இருப்பதற்கு தமிழக அரசு அலங்காநல்லூர் அருகே கீழக்கரை கிராமத்தில் 66 ஏக்கர் பரப்பளவில் ஜல்லிக்கட்டு திடல் ஒன்றை அமைத்து வருகிறது.

இதற்கிடையில் 2024 ஆம் வருடத்திற்கான போட்டியானது ஜல்லிக்கட்டு அரக்கத்தில் நடத்தப்படும் என்று முன்பு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அரங்கத்தில் நடைபெறாது என்றும் இந்த ஆண்டு வழக்கமான இடத்தில் தான் ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார். அரங்கத்தினுடைய கட்டுமான பணிகள் முழுவதுமாக முடிவடையாத காரணத்தினால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது/.