விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை சாலையில் ரயில்வே மேம்பாலத்திற்கு கீழ் பழைய பேப்பர் கடை அமைந்துள்ளது. இந்நிலையில் கடையில் இருந்த கழிவு அட்டைகளை லாரியில் ஏற்றி கொண்டிருந்தனர். அப்போது மேலே சென்ற மின்கம்பியில் உரசியதால் அட்டைகள் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.

இதுகுறித்து உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் விரைவாக செயல்பட்டு தீயை அணைத்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.