ஐபிஎல் 2023 மார்ச் 31-ஆம் தேதி கோலாகலமாக தொடங்குகிறது. ஐபிஎல் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகிறது. 3 வருடங்களுக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சேப்பாக்கம் மைதானத்திற்கு திரும்பி உள்ளதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. சென்னையில் மொத்தம் 7 லீக் போட்டிகள் நடைபெறும் நிலையில் டிக்கெட்டுகள் 1500 முதல் 3000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

இன்று காலை (திங்கள்)  9:30 மணியிலிருந்து சேப்பாக்கம் மைதானத்தில் டிக்கெட் விற்பனை தொடங்கியுள்ளது. டிக்கெட் வாங்குவதற்காக இரவு முதலே ரசிகர்கள் ஆர்வத்தோடு வரிசையில் காத்திருக்கின்றனர். மேலும் சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் கிரிக்கெட் போட்டியை காண்பதற்கு Paytm, www.insider.in போன்றவைகளிலும் சேப்பாக்கம் மைதானத்தில் உள்ள 2 கவுண்டர்களிலும் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.