ADMK கழக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு ஆலோசனை கூட்டம் Ops தலைமையில் நடைபெற்றது. இதில் பேசிய ஓ.பன்னீர்செல்வம்,  தொண்டர்களால் உருவான இந்த இயக்கத்தை, தான் மட்டுமே எல்லா பதவியும் கையில வச்சிக்கிடனும்,  நான் சொன்னதை மட்டுமே கேட்க வேண்டும்,  எதிர்த்து யாரும் பேசக்கூடாது. நல்ல பல கருத்துக்களை… தலைவர் கூறிய கருத்துக்களை…… மாண்புமிகு அம்மா அவர்கள் கூறிய கருத்துக்களை…..  தலைவரும் மாண்புமிகு அம்மா அவர்களும் இந்த கழகத்தை வழி நடத்திய விதத்தை….. அவர்கள் கடந்து வந்த பாதை….  நாம எதிர்கொண்ட சவால்களும், எப்படி எல்லாம் கடந்து வந்தார்கள் என்பதையெல்லாம் எடுத்து சொன்னால்,  அவருக்கு கோபம் வரும்.

நான் சொல்லுவதை கேளுங்கள்.  அப்படி என்று சொன்னால், தலைவரையும்,   புரட்சித்தலைவியும் அவமரியாதை செய்கின்ற ஒரே ஆள் திரு எடப்பாடி பழனிச்சாமி தான். இதற்கெல்லாம் முடிவு கட்டி …. நம்முடைய இயக்கம் கழகத் தொண்டளின் உரிமையை மீட்கின்ற களமாக  இன்றைக்கு இருக்கிறது. இங்கே கீழே உட்கார்ந்து இருப்பவர்கள், நாளை இங்கே வந்து மேலே உட்கார வேண்டும். தலைமை கழகத்தினுடைய அத்தணை பொறுப்புக்களில்….  அதை தானே புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் விரும்பினார்கள். அதற்காக தானே கழகம் உருவாக்கப்பட்டது.

மிட்டாதாரர்கள், மிராசுதார்களளுக்கு தான் பட்டம் பதவிகள் என்று இல்லை. இது கழகத்தில் இருக்கக் கூடாது என்று புரட்சித் தலைவர் அவர்கள் மனதார எண்ணினார்கள். அவரை திமுகவிலிருந்து விலக்கும்போது, அத்தணை திமுக  மாவட்ட கழக செயலாளர்களும்,  ஒரே ஒரு எம்எல்ஏ மட்டுமல்லாமல், அத்தனை எம்எல்ஏகளும் புரட்சித் தலைவரை விலக்குவதற்கு கையெழுத்திட்டார்கள்.

அந்த நிலை கழகத்திற்கு என்றும் வரக்கூடாது என்றுதான், புரட்சித் தலைவர் தீர்மானமாக கொண்டு வந்து, அவருடைய மனதில்….  இதயத்தில் தோன்றிய தீர்மானம் கொண்டு வந்து…. இந்த இயக்கம் தொண்டர்களின் இயக்கம். தொண்டர்கள் தான் கழகத்தினுடைய பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்படனும்,  அந்த சட்ட விதியை மாற்றுவதற்கு எந்த கொம்பனாலும் முடியாது என்ற விதியை கொண்டு வந்தார்கள் என தெரிவித்தார்.