இன்றைய காலத்து இளைஞர்களுக்குச் சவால் விடும் வகையில் சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ செம வைரலாகி வருகிறது. பொதுவாக கிராமத்துத் தம்பதிகள் அல்லது இளைஞர்கள் பைக் ஓட்டிச் செல்வதைப் பார்த்திருப்போம்,

ஆனால் ஒரு பாட்டி நைட்டி அணிந்துகொண்டு மிகவும் கூலாக பைக் ஓட்டிச் சென்றது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அதுவும் சாதாரணமான பயணமாக இல்லாமல், தனக்குப் பின்னால் மூன்று பேரை அமர வைத்துக்கொண்டு அந்தப் பாட்டி கிராமத்துச் சாலையில் ‘புயல்’ வேகத்தில் பைக்கை ஓட்டிச் செல்கிறார்.

வண்டியை அவர் கையாண்ட விதம் மற்றும் முகத்தில் இருந்த அந்தத் தன்னம்பிக்கை பார்ப்பவர்களை நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது. “பாட்டி வேற லெவல்” என நெட்டிசன்கள் இந்த வீடியோவைப் பாராட்டி சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.