சாலைகளில் பயணம் செய்யும் போது ஒரு சிறிய கவனக்குறைவு கூட மிகப்பெரிய ஆபத்தை விளைவிக்கும் என்பதற்கு இந்த வீடியோவே சாட்சி. பெட்ரோல் பங்க் ஒன்றின் முன்னே உள்ள வளைவில், இருபுறமும் சரியாகக் கவனிக்காமல் ஒரு பைக் சாலையைக் கடக்க முயற்சி செய்துள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக எதிரே அதிவேகத்தில் வந்த கார் ஒன்று, பைக் மீது பயங்கரமாக மோதியது. இந்த மோதலில் பைக்கில் இருந்த அந்த நபரும், அவருக்குப் பின்னால் அமர்ந்திருந்த பெண்ணும் காற்றில் தூக்கி வீசப்பட்டு தூரத்தில் விழுந்தனர்.
Isn’t it simple to check road before crossing? how can someone risk their life so easily? pic.twitter.com/aLftjfx5XK
— Deadly Kalesh (@Deadlykalesh) February 25, 2026
காண்பவர் நெஞ்சைப் பதறவைக்கும் இந்த விபத்து வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சாலை விதிகளை மதிக்காமல் அவசரம் காட்டுவது எவ்வளவு பெரிய உயிரிழப்பை ஏற்படுத்தும் என்பதை இந்தச் சம்பவம் உணர்த்துகிறது.
