சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோ ஒன்றில் மத்திய கிழக்கு நாடுகளின் விமானப் பயணத்தின்போது பயணிகளுக்கு இணையாகப் பருந்துகள் இருக்கைகளில் அமர்ந்து பயணம் செய்யும் காட்சி இணையவாசிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

கத்தாரிலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்குச் சென்ற ஒரு மணி நேரப் பயணத்தின்போது எடுக்கப்பட்ட இந்த வீடியோவில் நான்கு பருந்துகள் தங்களுக்கு என ஒதுக்கப்பட்ட இருக்கைகளில் அமைதியாக அமர்ந்திருப்பதை ஒரு பயணி படம் பிடித்துள்ளார்.

 

அரபு நாடுகளில் பருந்துகள் வளர்ப்பது ஒரு பாரம்பரியக் கலையாகக் கருதப்படுவதால் எமிரேட்ஸ் மற்றும் கத்தார் போன்ற முன்னணி விமான நிறுவனங்கள் குறிப்பிட்ட விதிகளுக்கு உட்பட்டு இந்தப் பறவைகளைத் தங்களது விமான அறைகளுக்குள் அனுமதிக்கின்றன.

வியக்கத்தக்க வகையில் ஐக்கிய அரபு அமீரக அரசு இந்தப் பறவைகளுக்கென அதிகாரப்பூர்வ கடவுச்சீட்டுகளை வழங்குகிறது அதில் அந்தப் பறவையின் இனம் வயது மற்றும் உரிமையாளர் குறித்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

சட்டவிரோதக் கடத்தலைத் தடுக்கவும் சர்வதேசப் பயணங்களை எளிதாக்கவும் இந்த நடைமுறை பின்பற்றப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.