செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், கொடநாடு கொலை வழக்கில் பழனிச்சாமி ஆட்சியில் ஏற்கனவே நிறைய சாட்சிகள்,  தடயங்கள் அடைக்கப்பட்டதாக புகார்கள் இருக்கிறது. அதனால் காவல்துறை எப்படியும் உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்து விட வேண்டும் என்று முயற்சி செய்கிறார்கள்.

அதை எவ்வளவு சீக்கிரம் செய்ய வேண்டுமோ,  அவ்வளவு சீக்கிரம் விரைந்து அதை கண்டுபிடிக்க வேண்டும் என்பதுதான் அம்மாவின் உண்மையான தொண்டர்களின் விருப்பம். தமிழ்நாட்டில் விடிவு காலம் வரும் என்று சொல்லி தான் முதலமைச்சர் ஆட்சிக்கு வந்தார். ஆனால் இன்றைக்கு தமிழ்நாட்டை படு பாதாளத்தில் தள்ளிவிட்டு தான் திமுக ஆட்சியை விட்டு போகின்ற நிலை தான் இன்றைக்கு இருக்கிறது.

இன்னொரு இரண்டு கட்சிகள் கூட்டணியில் இருந்து விலகி இருக்கிறார்கள். அது பற்றி அரசியல் பார்வையாளர்கள்  சொல்லலாம். எனக்கு அதைப் பற்றி கருத்து சொல்வதற்கு என்னிடம் கருத்து இல்லை. அதிமுக – பிஜேபி கூட்டணியில் இருந்ததால் தான் சிறுபான்மை மக்கள் வாக்கு அதிமுகவுக்கு விழவில்லை என்ற கேள்விக்கு  வருகின்ற பாராளுமன்ற தேர்தல்  பதில் சொல்லும்.

பழனிச்சாமி பற்றி உங்களுக்கு தெரியும். ஏற்கனவே  உள் ஒதுக்கீடு 10.5 சதவீதம் என்று சொல்லி வன்னியர் மக்களை ஏமாற்றினார். இப்பொழுது சிறுபான்மை மக்களை ஏமாற்றுவதற்கு முயற்சி செய்கிறார். ஏதாவது தேர்தல் வரும் பொழுது இந்த மாதிரி செய்வார்.  துரோகமும்,  ஏமாற்று வேலைதான் பழனிச்சாமியின் அரசியல் நடைமுறை (ஸ்டாண்ட்) அதே மாதிரி இப்போ

சிறுபான்மை மக்களை ஏமாற்றலாம் என்று நினைக்கிறார். வன்னியர் மக்களை எப்படி ஏமாற்ற முடியவில்லையோ, அது போல் சிறுபான்மையர் மக்களையும் ஏமாற்ற முடியாது. AMMK எந்த கூட்டணி ? அல்லது  தனித்து போட்டியா ? என்பதை வருகிற டிசம்பர் அல்லது ஜனவரியில் தெரியவரும் என தெரிவித்தார்.