கர்நாடகாவில் மேகதாது அணை கட்ட தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர ஷெகாவத்தை நேரில் சந்திப்பதற்காக துரைமுருகன் நாளை காலை டெல்லி செல்கிறார். விமான மூலம் அவர் டெல்லி செல்ல உள்ளார். இதற்காக இன்று மாலை அமைச்சர் துரைமுருகன் தமிழகத்தில் உள்ள நீர்வளத்துறை அதிகாரிகள், காவேரி நீர் சம்பந்தமான எக்ஸ்பர்ட் உள்ளிட்டவர்களிடம் ஆலோசனை நடத்துகின்றார்.

ஜூலை மாதத்திற்கு தரவேண்டிய தண்ணீர் எவ்வளவு இருக்கிறது ? ஜூன் மாதத்தில் தர வேண்டிய தண்ணீர் எவ்வளவு ? அதில் ஏற்கனவே ஜூன் மாதத்தில் வரவேண்டிய பாக்கி நீர் எவ்வளவு ?
என கணக்கெடுத்துக் கொண்டு டெல்லி செல்கிறார்.