
திமுக நடத்தும் நீட் விலக்கு கையெழுத்து இயக்கத்தில் கலந்து கொண்டு பேசிய DMK சட்டமன்ற உறுப்பினர் எழிலன், இது கையெழுத்து இயக்கமாக…. மக்கள் இயக்கமாக சென்று அடைய வேண்டும். 12ம் வகுப்பில் பயாலஜி குரூப்பில்… ஒரு பெற்றோர்கள் பிரச்சினையா? மாணவர் பிரச்சனையா? மக்கள் பிரச்சனையா ? அப்படின்னு எல்லாரும் கேட்கிறார்கள்.. நீட் ஒழிப்பு மட்டும்தான் பிரதான வேலையா? ஏன் நீட் எதிர்ப்பு இவ்வளவு தூரம் தமிழ்நாடு பண்ணுகிறது…
இளைஞரணி செயலாளர் மாண்புமிகு அமைச்சர் அவர்கள் அறவழியில் உண்ணாவிரத போராட்டமாக இருக்கட்டும்… இப்போது தொடங்கியுள்ள இந்த மாபெரும் கையெழுத்து இயக்கமாக இருக்கட்டும்…. ஏன் இவ்வளவு தூரம் மெனக்கிடுகிறீகள் ? என்று சொல்பவர்களுக்கு பதில் இதை மக்கள் இயக்கமாக மாற்றானும். அனிதாவின் அண்ணன் மணிரத்தினம் பேசினார்…
அனிதா 2017ல் இறந்தது.. இன்னைக்கு 2023 … அனிதா உயிரோடு இருந்திருந்தால், டாக்டர் ஆகியிருப்பார்கள். அனிதாஅப்பா ஒரு விவசாயிகள் தின கூலி. அரியலூர் மாவட்டத்தில் கிராமத்தில் போகும் பொழுது வெள்ளை கோட்டு போட்டு போயிருப்பார்கள். அனிதாவை பார்த்து என்ன பண்ணுவாங்க ? என்னவென்றால், மற்ற குழந்தைகள் அந்த அக்காவே இவ்வளவு கஷ்டப்பட்டு மெடிக்கல் வாங்கி இருக்கிறது என நமது குழந்தையும் மெடிசின் சேரலாம்,
சேர முடியும் என்று அந்த ஊரில் இருக்கும்…. கிராமத்தில் இருக்கின்ற ஏழை பெற்றோர்கள் அனிதாவிடம் கேளுங்கள்… MBBS படிப்பதற்கு 12 ஆம் வகுப்பில் என்ன பண்ணலாம் ? என்று அனிதாவிடம் கேளுங்க என சொல்லி இருப்பாங்க. அனிதாவும் லீவில் ஊருக்கு வரும் பொழுது டியூஷன் எடுத்து அங்கிருக்கும் பசங்களுக்கு எப்படி டாக்டர் ஆகணும்னு பயிற்சி கொடுத்திருப்பார்கள். அனிதா MBBS முழுதிருப்பார்கள்.
முத்தமிழர் அறிஞர் கலைஞர் ஒவ்வொரு மாவட்டத்திலும் உருவாக்கிய அரசாங்க மருத்துவக் கல்லூரியில்… விழுப்புரம் மாவட்டத்தில் சேர்ந்திருப்பார்கள்… அங்க சேர்ந்து என்ன பண்ணி இருப்பார்கள் ? ஆரம்ப சுகாதார நிலையத்தில் MBBS டாக்டர் ஆகி இருப்பார்கள். அப்ப ஆரம்ப சுகாதார நிலையத்தில் MBBS டாக்டராக இருக்கும் பொழுது… அவர்கள் இரண்டு வருடம், 3 வருடம் MBBS டாக்டராக அரசாங்க வேலை பார்த்தால், முத்தமிழர் அறிஞர் கலைஞர் PG படிக்கும் பொழுது 50 சதவீதம் கோட்டா கொடுத்துள்ளார்.
அனிதா அவர்கள் 50 சதவீதம் கோட்டாவில் விழுப்புரமோ அல்லது சென்னை மருத்துவ கல்லூரியில் MD ( O.G), Paediatrics படிச்சி முடிச்சி இருப்பாங்க. அதோடு இல்ல.. முத்தமிழ் அறிஞ்சர் கலைஞர் சொல்றாரு… சரிம்மா திருப்பி Assistant professor ஆகிட்டிங்க. நீங்க சூப்பர் ஸ்பெஷாலிட்டி பண்றதுக்கு அரசாங்கம் 50% கோட்டா கொடுக்குது. அரசாங்கம் மருத்துவர்களுக்கு… அவங்க சூப்பர் ஸ்பெஷாலிட்டில தோழர் மதிவதனி சொன்னாங்க.. Vascular surgery முடிச்சி இருப்பாங்க, nephrology முடிச்சி இருப்பாங்க, Cairo Thoracic Surgeryயாக வந்து இருப்பாங்க.
ஏன் ? அந்த மருத்துவ கல்லூரிக்கு டீனாக கூட வந்து இருப்பாங்க. அப்ப ஒரு விவசாய கூலியா இருக்குற ஒரு மகள்… ஒரு டீன் குடும்பமாக மாறி இருக்குமா ? இல்லையா ? அப்போ எது இதை தடுத்தது ? என்ன தடுத்தது ? நீட் தடுத்தது ? நீட் தேர்வு தடுத்தது ? தமிழ்நாட்டுல பல்லாயிரக்கணக்கான அனிதாக்கள் இன்றைக்கு டீனாக மாற்றிய மாபெரும் சாதனை திராவிட முன்னேற்றக் கழகம் பண்ணிய சாதனை தான்… தந்தை பெரியார் வழியில்…. பேரறிஞர் அண்ணா வழியில்… முத்தமிழறிஞர் கலைஞர் வழியில்… டிரான்ஸ்பர்மேஷன், ட்ரான்ஸ்பர்மிஷன் ஷிப்ட்…..
இந்த மாபெரும் சாதனை நான் ஆய்வு பண்ணல.எக்ஸ் ப்ரைம் மினிஸ்டர் டோனி பிளேயர் ஆப்பிரிக்கா நாட்டில் எப்படி மருத்துவர்களை சேர்ப்பது என ஒரு மாடல் அங்கே ஆய்வு செய்துள்ளார்கள். அப்படி ஆய்வு பண்ணும்போது, அப்போ ஆப்பிரிக்கா நாடுகளுக்கு என்ன வழிகாட்டுகின்றார்கள் என்றால் ? நீங்க கலாச்சார ரீதியாக… பண்பாடு ரீதியாக… கருப்பின மக்களை அடிமைப்படுத்தி இருக்காங்க…
அவங்களை மீட்டு எடுக்க வேண்டும் என்றால் எப்படி ? என வழிகாட்டுதல் கொடுக்கின்றார்கள் என்றால் ?திராவிட முன்னேற்றக் கழகம்… தந்தை பெரியார் வழியில்…. அறிஞர் அண்ணா வழியில்… கலைஞர் வழியில்…. திராவிட மாடல் முதல்வர் வழியில்… திராவிட மாடலை வழிகாட்டுகின்றார்கள். சாமானியர்களுக்கு மருத்துவம் போய் சேக்கணும்னா…..திராவிட மாடல் கருத்து என்னென்னா…? சாமானியர்களை மருத்துவராகிய அழகு பார்த்த சிஸ்டம், நம்மளோட சிஸ்டம் என பெருமையாக பேசினார்.