திமுக நடத்தும் நீட் விலக்கு கையெழுத்து இயக்கத்தில் கலந்து கொண்டு பேசிய தயாநிதி மாறன் MP பேசும் போது, எனக்கு நடந்த உண்மை கதையை சொல்ல சரியான மேடை  இது தான். நான் திமுக, எங்க அப்பா திமுக  எங்க தாத்தா திமுக, தம்பி திமுக,  குடும்பமே திமுக. ஹிந்தி எதிர்ப்பு.. நாங்கள் எல்லாம் படித்தது ஸ்டேட் போர்டு ஸ்கூல். சிபிஎஸ்இ ஸ்கூலில் நாங்க படிக்க மாட்டோம்.

ஏனென்றால்,  நான் இந்தி படித்து என்ன புடுங்க போகிறேன் என சொல்லி நாங்க ஹிந்தி படிக்கவில்லை. எனக்கு பொண்ணு பிறக்குறா… என் பொண்டாடி சிபிஎஸ்சியில் சேருங்க என சொல்லுறாங்க. நான் முடியாது.. சண்டை… குடும்பத்தில் சண்டை…. சிபிஎஸ்சியா ?  ஸ்டேட் போர்டா ? நான் இல்லை ஸ்டேட் போர்டு தான் என உறுதியாக இருந்தேன்.

இல்லை அவ மெடிசன் படிக்கணும் என என் மனைவி சொல்கிறார். நீ எம்மா  கவலைப்படுகிறாய்…. என் கலைஞர் எவ்வளவு பேருக்கு சீட் வாங்கி கொடுத்து இருக்காரு… எங்க அப்பா எவ்வளவு பேருக்கு சீட் வாங்கி கொடுத்து இருக்காரு… மாமா ஸ்டாலின் எவ்வளவு பேருக்கு சீட்டு வாங்கி கொடுத்து இருக்காரு.  நானே மந்திரியா இருக்கும் எவ்வளவு பேருக்கு  சீட்டு வாங்கி கொடுத்திருக்கிறேன்… என் பொண்ணுக்கு  நான் வாங்கி தர மாட்டேனா என்று மார்தட்டி நின்றேன்.

2017 என் மகள் பனிரெண்டாம் வகுப்பு முடித்தாங்க. வந்தது பாருங்க நீட்….  எண்ணாகி விட்டது ?  கேட்கிறார் என் பொண்ணு ? சொன்னியே அப்பா சீட்டு வாங்கி கொடுக்கிறேன் என்று….. உன்னை நம்பி தானே நான் ஸ்டேட் போர்டு படித்தேன். ஸ்டேட் போர்டுல நல்ல மார்க் வாங்கிட்டேன். இப்போ எனக்கு மெடிசன் சீட்டு வாங்கி கொடு ? என என் மகள் கேட்டால் ? கண்கலங்கி நின்றேன்.

என் இயலாமையை பார்த்து கண்கலங்கி நின்றேன். ஏனென்றால், என் சொந்த மகளுக்கு என்னால் ஒரு மருத்துவ படிப்பிற்கு சீட் வாங்கி கொடுக்க முடியாத நிலை. என் மகள் நீட் எழுதினார்கள். ஆனால் தேர்வு பெற முடியவில்லை. காரணம் என்றால்,  ஸ்டேட் போர்டு படித்துவிட்டு…. சிபிசிஎஸ்சிக்கு முடியாது. அதனால் பிராக்டிக்கலாக அனுபவித்த பெற்றோர் என பேசினார்.