நீட் விலக்கு கேட்டு திமுக நடத்திய கையெழுத்து இயக்கத்தில் கலந்து கொண்டு பேசிய  திராவிட கழக துணை பொதுச் செயலாளர் வழக்கறிஞர் மதிவதனி,  நீட் விலக்கு கேட்டு திமுக நடத்திய கையெழுத்து இயக்கத்தில் கலந்து கொண்டு பேசிய  திராவிட கழக துணை பொதுச் செயலாளர் வழக்கறிஞர் மதிவதனி, நீட் தேர்வால் ஊழலை ஒழிக்கிறோம் என BJP அரசு சொல்லிச்சி. சிறப்பாக ஒழித்து இருக்கிறார்கள். சும்மா 7.50 லட்சம் கோடி தான்.

வேறு எல்லாம் பெரிதாக ஒன்னும் கிடையாது. என்ன ஊழலை ஒழித்து இருக்கிறார்கள் என்று சொன்னால் ? நீட்டிற்கு முன்னாடி லட்சகணக்கில் டொனேஷன் வாங்குகிறீர்கள்..   ஏழை – எளிய மாணவர்கள் பாதிக்கிறார்கள் என்று சொன்னார்கள். அதோட அர்த்தம் அப்போ நமக்கு புரியவில்லை. ஒன்றிய அரசும்,  பிரதமரும் என்ன சொல்லுகிறார்கள்?

மேஜைக்கு மேல் கொடுக்காதே,  கீழே கொடு…  அதற்கு சட்டபூர்வ ஒப்புதலை நீட் என்ற பெயரில் நான் கொடுக்கிறேன்  என்று சொன்னதுதான் நீட் நுழைவு தேர்வு. அதனால் தான் சட்டபூர்வ ஒப்புதல்  கொடுத்திருக்கிறீர்கள். எதற்கு ? ஊழலுக்கு ஒன்றிய அரசு சட்டபூர்வமான அதிகாரத்தை கொடுத்தது தான் நீட் என்ற மிகப்பெரிய உலகளாவிய ஊழல்.

இது தமிழ்நாடு  இந்தியாவில்  மட்டுமல்ல.. உலகத்தில் உள்ள NRIக்கு எல்லாம் இன்னைக்கு தமிழ்நாட்டில் சீட் கொடுத்துட்டு இருக்காங்க. அப்போ இது தகுதியற்ற தேர்வு,  ஊழல் மிகுந்த தேர்வு. சரி இதை ஏன் பிடித்துக் கொண்டு…  எங்க பிள்ளைங்க படிக்கணும் இவுங்க இவ்வளவு பாடுபடுத்துகிறார்கள். நீ இதை படித்தால்தான் திறமையானவன் என்று நம்மை நம்பி வைக்கிறார்கள். இதை இவர்களுடைய இன்னைக்கு   நேற்றைய அஜெண்டா இல்லை என பேசினார்.