ஒவ்வொருநாளும் ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் பலரும் மன உளைச்சலுக்கு ஆளாகி  தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.  இதனையடுத்து ஆன்லைன் சூதாட்ட விளையாட்டை தடை விதித்து தமிழக அரசு சட்டம் இயற்றியது. இந்த சட்டத்திற்கு பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியது. இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில் அதிர்ஷ்டத்துக்கான ஆன்லைன் விளையாட்டுக்களை தமிழக அரசு தடை செய்தது செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தற்போது தீர்ப்பளித்துள்ளது. தமிழக அரசின் சட்டத்தை எதிர்த்து விளையாட்டு நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கில், ரம்மி, போக்கர் விளையாட்டுக்களை தடை செய்த பிரிவை மட்டும் ரத்து செய்துள்ளது. ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளுக்கு வயது வரம்பு, நேரத்தை அரசு நிர்ணயம் செய்யலாம் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.