திமுக நடத்தும் நீட் விலக்கு கையெழுத்து இயக்கத்தில் கலந்து கொண்டு பேசிய பிரின்ஸ் கஜேந்திர பாபு, உதயநிதி ஸ்டாலின் எடுத்துள்ள இந்த முயற்சி வரலாற்றிலே மிக முக்கியமான முன்னெடுப்பு என்பதை நாம் உணர வேண்டும். அதற்கு மிக முக்கியமான காரணம் என்னவென்றால்,  நீட்டை இந்த மேடையிலே எனக்கு முன்னாடி பேசியவர்கள் உட்பட நீட்டை தேர்வு, தேர்வு, தேர்வு, தேர்வு என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

நீட் என்பது சூதாட்டம் என்பதை இன்னும் நாம் உணரவில்லை.  உணராத தன் வெளிப்பாடுதான் இன்னும் கூட நம்ம வாயிலிருந்து கூட  நீட் தேர்வு ஒரு தேர்வு… தேர்வு என அவன்  ஏற்றி வைத்துள்ளான்.  நீட் என்பது ஒரு தேர்வே கிடையாது. மதிப்பீடு (Evaluation) , தீர்வு என்பது பாடத்திட்டதோடு சம்மந்தப்பட்டது.

பாடத்திட்டத்தை யார் வடிவமைக்கிறார்களோ,  பாடத்திட்டத்தை வடிவமைக்கும் பொழுது…  பாடத்திற்கான உள்ளடக்கத்தையும்,  கற்றல்  செயல்முறையையும்…  இந்த பாடத்திட்டத்தை இந்த கற்றல் செயல்முறையில் கற்றால் எவ்வாறு மதிப்பிட வேண்டும் ? என்பது சேர்ந்து வருவது தான் Syllabus.  பாடத்திட்டமே இல்லாமல் நீங்கள்  நடத்தக்கூடியது  எப்படி ஒரு தேர்வாக அமைய முடியும் ? எனவே நீட் என்பது அடிப்படையில் தேர்வு அல்ல என்பதை உணர வேண்டும்.

தேசிய மருத்துவ ஆணையத்தின் செக்ஷன் 14 ஒரு சூதாட்டம் என்று சொன்னால்,  இன்னொரு மிகப்பெரிய சூதாட்டம் தான் செக்சன் 15. செக்சன் 49யை கிராஸ் பண்ணி தான் கோட்டு போட்டு இருக்கிறீர்கள். இந்த கோர்ட் நிலைத்து,  டாக்டர் கோட்டாக மாற வேண்டும் என்று சொன்னால், செக்சன் 15யை  கிளியர் பண்ண வேண்டும். செக்சன் 15யை  கிளியர் பண்ணவில்லை என்றால்,  நீங்கள் டாக்டர் ஆக முடியாதே என பேசினார்.