தமிழகத்தில் நவம்பர் 13 மற்றும் நவம்பர் 25 ஆகிய தேதிகளில் அனைத்து ரேஷன் கடைகளுக்கும் விடுமுறை என்று அரசு அறிவித்துள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்களுக்கு பொருட்கள் வழங்கும் வகையில் நவம்பர் 3 மற்றும் நவம்பர் 10 ஆகிய தேதிகளில் வேலை நாட்கள் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இந்த வேலை நாட்களை ஈடு செய்யும் வகையில் தீபாவளிக்கு அடுத்த நாள் மற்றும் நவம்பர் 25ஆம் தேதி சனிக்கிழமை ரேஷன் கடைகள் இயங்காது என்று தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழகம் தெரிவித்துள்ளது.