விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வாக்குசாவடி முகவர்கள் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், அம்பேத்கர் எழுதிய அரசியல் சட்டத்திற்கும்,  சனாதன சக்திகள் பாதுகாக்க விரும்புகின்ற மனு சட்டத்திற்கும் இடையேயான யுத்தம் தான் இந்தியாவில் நடந்து கொண்டிருக்கிறது. இந்தியா முழுவதும் நடைபெறுகிற விவாதம். அம்பேத்கர் கருத்தியலுக்கும்,  சனாதன கருத்தியலுக்குமான  விவாதம். வெவ்வேறு மொழியில் பேசுவார்கள்…

வெவ்வேறு டோன்ல பேசுவார்கள். ஆனால் அத்தனை பேருடைய குரலும் இன்றைக்கு அம்பேத்கரின் குரலாக  ஒலிக்கிறது. கம்யூனிஸ்டுகளின் குரலாக இருந்தாலும்,  காங்கிரசின் குரலாக இருந்தாலும்,  திமுகவின் குரலாக இருந்தாலும்,  இதர ஜனநாயக சக்திகளின் குரலாக இருந்தாலும் வெவ்வேறு மொழியில் பேசப்பட்டாலும், அனைத்தும் அம்பேத்கரின் குரல் மறந்து விடக்கூடாது. எனவே பிஜேபி ஆட்சிக்கு வரக்கூடாது.

அப்போதுதான் அரசியல் சட்டத்தை பாதுகாக்க முடியும். மல்லை சத்யா சொன்னார்…  சில தோழர்கள் குறிப்பிட்டார்கள். உத்தரபிரதேசத்திலேயே ஒரு அமைப்பை சார்ந்த குழு ”நியூ கான்ஸ்டிடூஷன் டிராப்ட்” புதிய அரசியல் சட்ட வரைவு நகலை வெளியிட்டு விட்டார்கள். அம்பேத்கரின் அரசியலமைப்பு சட்டம்  வேண்டாம் என்கிறார்கள், இதுதான் அவுங்க  அல்டிமேட் எய்ம். ஆர்எஸ்எஸினுடைய திட்டத்தை நடைமுறைப்படுத்துகிறது பிஜேபி என தெரிவித்தார்.