பிரபல இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் தற்போது தக்லைப் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். நாயகன் படத்தின் வெற்றிக்கு பிறகு கிட்டத்தட்ட 37 வருடங்களுக்குப் பிறகு கமல்-மணிரத்தினம் கூட்டணி இணைந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.

இந்த படத்தில் நடிகை திரிஷா முக்கிய வேடத்தில் நடிக்கும் நிலையில் ஜெயம் ரவி மற்றும் துல்கர் சல்மான் ஆகியோர் படத்தில் இருந்து விலகிவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் துல்கர் சல்மான் நடிக்கவிருந்த ரோலில் தற்போது நடிகர் சிம்பு நடிக்க உள்ளார். இந்த தகவலை டீசர் வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. மேலும் தக் லைப் படத்தில் மாஸ் என்ட்ரி கொடுக்கும் நடிகர் சிம்புவின் டீசர் தற்போது வலைதளத்தில் வைரலாகி வருகிறது.