மருமகனுக்கு 173 வகை உணவுகளை செய்து அசத்திய மாமியாரின் செயல் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத்-ஐ சேர்ந்தவர் பிருத்வி குப்தா. இவர் தனது மனைவி ஹாரிக்காவுடன் கிழக்கு கோதாவரி மாவட்டம் பீமாவரத்தில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு சென்றார். முதல்முறையாக வீட்டிற்கு வந்த புது மாப்பிள்ளையை வரவேற்கும் விதமாக மாமியார் 173 வகையான உணவுகளை தயார் செய்து அசத்தினார்.
உறவினர்கள் உதவியுடன் மாமியார் 173 வகையான உணவுகளை தயார் செய்தார். சாதம், பிரியாணி, புளியோதரை, தக்காளி சாதம், எலுமிச்சை சாதம், அவியல், கூட்டு, பொரியல் என உணவு பட்டியல் நீண்டு கொண்டே சென்றது. இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது. இதனை பார்த்த நெட்டிசன்கள் தங்களுக்கு இப்படி ஒரு மாமியார் கிடைக்கவில்லை என்று கமெண்ட்களில் கூறி வருகின்றார்கள்.