விஜய் நடிப்பில் வாரிசு திரைப்படமும் அஜித் நடிப்பில் துணிவு திரைப்படமும் சென்ற ஜனவரி 11-ஆம் தேதி ரிலீசானது. இரு உச்ச நட்சத்திரங்களின் திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியானதால் பெரிய அளவு சண்டை ஏற்பட்டது, திரையரங்கம் சேதமானது .

மேலும் வசூலும் பாதிக்கப்பட்டதாக சொல்லப்படுகின்றது. இதை கருத்தில் கொண்டு இனி வரும் காலங்களில் அஜித் மற்றும் விஜய் திரைப்படங்களை ஒன்றாக வெளியிட கூடாது என்று உட்லண்ட்ஸ் திரையரங்க உரிமையாளர் வெங்கடேசன் தமிழக அரசிடம் கோரிக்கை வைக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.