தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக ஜொலிக்கும் நடிகர் அஜித்தின் துணிவு மற்றும் நடிகர் விஜயின் வாரிசு திரைப்படங்கள் ஜனவரி 11-ஆம் தேதி ரிலீஸ் ஆகி பாசிட்டிவ் விமர்சனங்களை குவித்து வருவதோடு பாக்ஸ் ஆபீஸிலும் வசூல் மழை பொழிகிறது. இந்த படங்கள் உலக அளவில் வசூல் சாதனை புரிந்து வரும் நிலையில் அரபு நாடுகளில்  துணிவு திரைப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி குவைத்தில் உள்ள ஒரு பெரிய தியேட்டரில் அதிகம் வசூல் செய்த டாப் 5 திரைப்படங்களில் துணிவு திரைப்படம் இடம்பெற்றுள்ளதாம். ஆனால் இந்த லிஸ்டில் வாரிசு திரைப்படம் வரவே இல்லை என்று கூறப்படுகிறது. மேலும் நடிகர் அஜித்தின் துணிவு திரைப்படத்தை போனி கபூர் தயாரிக்க எச். வினோத் இயக்கியுள்ளார். இதேபோன்று வாரிசு திரைப்படத்தை தில் ராஜு தயாரிக்க வம்சி இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.