துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட வரலாறு காணாத நிலநடுக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. இரண்டு நாடுகளும் கடும் பேரழிவை சந்தித்துள்ளன. நிலநடுக்க பாதிப்பு குறித்து வெளியாகி வரும் புகைப்படங்கள் பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகின்றது.

கட்டிட இடிபாடுக்கு அடியில் சிக்கிய 15 வயது சிறுமி வெளியில் அமர்ந்திருக்கும் தந்தை கையை பிடித்தபடி உயிரிழந்த காட்சி காண்போர் கண்களில் கண்ணீரை வரவழைக்கின்றன. இது போன்ற கொடுமையான நிகழ்வுகளை காண்போர் கண்ணீர் மழையில் நனைந்து வருகின்றனர்.