சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு காணொளி ஒருவரின் தோற்றத்தை வைத்து அவரது திறமையை எடைபோடக் கூடாது என்பதை உலகிற்கு உணர்த்துகிறது. உக்ரைன் நாட்டைச் சேர்ந்த பளுதூக்கும் வீரரான வொலோதிமிர் ஷ்மோண்டென்கோ என்பவர் அனடோலி என்ற பெயரில் தூய்மைப் பணியாளர் போல வேடமிட்டு உடற்பயிற்சி கூடத்திற்குச் சென்றார்.
View this post on Instagram
அங்கு கடினமான எடைகளைத் தூக்கிக் கொண்டிருந்த வீரர்களிடம் தான் மிகவும் பலவீனமானவர் போலவும் தற்செயலாக கீழே விழுந்தும் நடித்தார். இதனைப் பார்த்த அங்கிருந்த வீரர்கள் அவரை ஏளனமாகப் பார்த்து சிரித்ததுடன் உன்னால் இவ்வளவு எடையைத் தூக்க முடியாது என்று கேலி செய்தனர். அப்போது தன்னிடம் இருந்த ஆப்பிள் சாறு குடித்தால் பலம் வரும் என்று அவர் வெகுளியாகக் கூறியதைக் கேட்டு அனைவரும் சிரித்தனர்.
ஆனால் அடுத்த சில நொடிகளில் பலசாலிகளே திணறும் ஒரு பெரும் எடையை அவர் மிகச் சாதாரணமாகத் தூக்கி நிறுத்தியதைக் கண்டு அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட இந்த வேடிக்கை காணொளி சுமார் 3 கோடிக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று வைரலாகி வருவதுடன் மற்றவர்களைத் குறைவாக மதிப்பிடக் கூடாது என்ற பாடத்தையும் புகட்டுகிறது.
