செய்தியாளர்களிடம் பேசிய விகே.சசிகலா, இப்போ நீங்க பார்த்தீங்கன்னா…  5 1/2 இலட்சம் பேரை  வேலைக்கு ஆள் எடுக்கிறேன் என்று சொன்னாங்க எடுத்தாங்களா ? தொகுப்பு ஊதியத்தில் இருக்கிற தூய்மை தொழிலாளர்கள் கூட இன்னைக்கு ஸ்ட்ரைக்ல உட்கார்ந்து இருக்காங்க.  அந்த மாதிரி நிலைமையில் தான் இன்னைக்கு திமுக செயல் பட்டு இருக்கு.  அவங்களை பொருத்தவரைக்கும்,  இரண்டுதாங்க…

தேர்தல் வரைக்கும் ஒன்னு பேசுவாங்க. தேர்தல் முடிஞ்சுச்சுன்னா…. அடுத்தது பார்லிமென்ட் தேர்தல். ரெண்டு வருஷத்துக்குள்ள வருது நமக்கு. அதனால இப்போ அதற்காகத்தான் இந்த ஆயிரம் ரூபாய்ன்னு கூட சொல்லுறது. இது நீங்க எல்லாமே என்கிட்ட ஒரு நாள் பேசும்போது சொல்லுவீங்க…  ரூ.1000 தொடர்ந்து கொடுக்கல…  நீங்க சொன்னது சரிதான் அப்படின்னு தான் நீங்க எல்லாம் சொல்ல போறீங்க.

இப்ப அது மட்டும் இல்ல.  எல்லா விஷயத்துலயும் அவங்க தவறு மேல தவறு செஞ்சிட்டு போறாங்க. எங்கேயாவது மணல் குவாரியில் போயி அமலாக்கத்துறை போயி சோதனை பண்ணுற லெவல்ல இன்னைக்கு தமிழ்நாடு இருக்கு. அதுக்கு என்ன காரணம் ?அதனால் தான் காவேரியில் தண்ணீர் இருந்தா…  நீங்க மண் எடுக்க முடியாது. அதனால கூட இருக்கலாம். DMK அரசு தண்ணீருக்கு பிரஷர் போட்டு கர்நாடகா அரசுகிட்ட கேட்க மாட்டேங்குது அப்படிங்குற சந்தேகமும் எனக்கு வருது என தெரிவித்தார்.