இந்தியாவில் கொரோனா காலத்திற்கு பிறகு ஓடிடி அசுர வளர்ச்சி அடைந்து விட்டது என்றே கூறலாம். தற்போது பெரும்பாலானவர்கள் தியேட்டருக்கு சென்று படம் பார்ப்பதை விட ஓடிடி தளங்களில் படம் பார்ப்பதையே விரும்புகிறார்கள். அதன் பிறகு ஓடிடியில் படங்கள் மட்டுமின்றி பல வெப் தொடர்களும் வெளியாகி வருகிறது. இதில் முன்னணி நடிகர் நடிகைகளும் நடிப்பதற்கு ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

அந்த வகையில் பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அஜய் தேவகன் ஓடிடி தொடரில் நடிப்பதற்கு அதிக சம்பளம் பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி வெப் தொடர்களில் நடிக்கும் நடிகர் நடிகைகளில் அதிக சம்பளம் பெறும் நபர்களின் பட்டியலில் முதலிடத்தில் நடிகர் அஜய் தேவகன் இருக்கிறார். இவன் நடிப்பில் சமீபத்தில் ருத்ரா என்ற வெப் தொடர் 7 சீரிசாக வெளியாகிறது. இதில் ஒரு எபிசோடில் நடிப்பதற்கு மட்டும் அவர் ரூ. 18 கோடி சம்பளமாக பெற்றுள்ளாராம். மேலும் அதன்படி மொத்தமாக ருத்ரா தொடருக்காக அவர் ரூ. 126 கோடி சம்பளமாக பெற்றுள்ளார் என்று கூறப்படுகிறது.