தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் தமன்னா பாலிவுட்டிலும் அதிக படங்களில் நடித்து வருகிறார். இவர் ஒரு படத்தில் நடிப்பதற்கு ரூ.4 முதல் ரூ.5 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான அரண்மனை 4 திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் நடிகை தமன்னாவின் சொத்து மதிப்பு குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி இவருக்கு மும்பையில் 20 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆடம்பர பங்களா  இருக்கும் நிலையில் சென்னையிலும் பல கோடி மதிப்புள்ள பிளாட் ஒன்று உள்ளது. அதோடு பல சொகுசு கார்களையும் வைத்துள்ளார். மேலும் இவருடைய மொத்த சொத்து மதிப்பு மட்டும் ரூ. 120 கோடி ரூபாய் வரை இருக்கலாம் என்று கூறப்படுகிறது.