உலகப் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஜானகி. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட 17 மொழிகளில் 48,000 பாடல்களை பாடியுள்ளார். இவர் 4 முறை தேசிய விருது பெற்றுள்ளார். தமிழக அரசு இவருக்கு கலை மாமணி விருது வழங்கி கௌரவித்த நிலையில் மொத்தம் 32 விருதுகளை அவர் வென்றுள்ளார். இவர் கடைசியாக நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த வேலையில்லா பட்டதாரி படத்தில் அம்மா அம்மா என்ற பாடலை பாடியிருந்தார். அதன் பிறகு பாடகி ஜானகி 7 வருடங்களாக பாடவில்லை.

இந்நிலையில் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட ஜானகி தான் 7 வருடங்களாக பாடாமல் இருப்பதற்கான காரணத்தை அவர் கூறியுள்ளார். அதாவது என்னுடைய வருங்கால தலைமுறையினர் பாடி புகழ் பெற வேண்டும் என்பதற்காகவே தான் இசைத்துறையில் இருந்து ஓய்வு பெற்றுக் கொண்டதாக அவர் கூறியுள்ளார். மேலும் திறமை இருக்கிறது வாய்ப்பு கிடைக்கிறது என்பதற்காக நாம் மட்டுமே பாடி புகழையும் பணத்தையும் சம்பாதிப்பதில் எந்தவித நியாயமும் இல்லை. நம் வருங்கால தலைமுறைகளுக்கு வழி விடுவதே சிறந்தது என்று கூறியுள்ளார்.