தமிழ் சினிமாவில் 60 மற்றும் 70களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் கே.ஆர் விஜயா. இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் நடித்துள்ளார். இவர் கடந்த 1963ஆம் ஆண்டு வெளியான கற்பகம் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இவர் சுமார் 600க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள நிலையில் தற்போது நடிகை விஜயா பற்றி ஒரு முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது தமிழ் சினிமாவில் முதல் முறையாக தனி விமானம் வாங்கிய நடிகை என்ற பெருமை நடிகை கே.ஆர் விஜயாவையே சேரும். மேலும் கே.ஆர் விஜயா நடிப்பில் ஒரு வருடத்திற்கு குறைந்தது 10 படங்கள் வெளியாகும் நிலையில் எம்ஜிஆர் மற்றும் சிவாஜி கணேஷனுக்கு இணையாக அவரும் சம்பளம் பெற்றார் என்று கூறப்படுகிறது.