தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் 1.06 கோடி குடும்ப தலைவிகளுக்கு வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டது. ஒவ்வொரு மாதமும் குடும்ப தலைவிகளின் தரவுகள் ஆய்வு செய்யப்படும் என்றும் வருமானம் மற்றும் கார் உள்ளிட்ட வாகனங்கள் பதிவாகி இருந்தால் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கப்படாது எனவும் தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

அதன்படி கடந்த செப்டம்பர் மாதம் உரிமை தொகை பெற்றவர்களின் சிலர் தவறான தகவல்களை அளித்து ஆயிரம் ரூபாய் பெற்று இருந்த நிலையில் தரவுகள் ஆராயப்பட்டு 8833 குடும்ப தலைவிகளின் பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. அதனைப் போலவே மின்கட்டணம் அதிகமாக இருந்தாலும் அடுத்தடுத்த மாதங்களில் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்குவது நிறுத்தம் செய்யப்படும். எனவே சரியான அளவில் மின்சாரத்தை பயன்படுத்த வேண்டும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.