என் மண், என் மக்கள் யாத்திரையில் கலந்து கொண்டு பேசிய தமிழக பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை, வீரம் விளைந்த மண்ணில் இருந்து உறக்க இந்த செய்தி செல்ல வேண்டும் என்பதற்காகத்தான் ”என் மண், என் மக்கள்” யாத்திரை உசிலம்பட்டிக்கு போக வேண்டாம் என்றுதான் நினைத்தோம். ஏன் உசிலம்பட்டிக்கு போக வேண்டாம் என நினைத்தோம் என்றால் ? உசிலம்பட்டிக்காரர்கள் தேசியவாதிகள். தெய்வத்தை நம்புகிறவர்கள்.
எட்டு நாட்டில் இருக்கக்கூடியவர்கள், குலதெய்வத்தை விட்டுக் கொடுக்காதவர்கள், தர்மத்தில் இருக்கக்கூடியவர்கள். எனவே உசிலபட்டிக்கு போகாம அப்படியே போயிறலாம்ன்னு நினைச்சோம். நாம போனாலும் உசிலம்பட்டிக்காரங்க வரவேற்பாங்க, நாம போகவில்லை என்றாலும் ? மலர்த்தூவி வரவேற்பார்கள். அப்படிப்பட்ட தர்மத்திற்கு சொந்தக்காரர்கள். இருந்தும் உசிலம்பட்டிக்கு வந்ததன் மூலமாக….
இந்த மைக் மூலமாக… வீடியோ மூலமாக…. தமிழகத்தில் இருக்க கூடிய எல்லா சொந்தங்களுக்கும்…. உசிலம்பட்டிகாரர்கள் எப்படிபட்டவர்கள் ? என்று சொல்வதற்காக இங்கே வந்திருக்கிறோம்… வேறு எதுக்கும் வரல. உங்கள் மண்ணில் வந்து, உசிலம்பட்டிக்காரர்களை பற்றி சொல்ல வேண்டும். அது தொலைக்காட்சியில் எல்லா இடத்திற்கும் செல்ல வேண்டும் என்பதற்காக வந்திருக்கிறோம். அப்படிப்பட்ட வீரம் விளைந்த புண்ணிய பூமியில் இருக்கக்கூடிய
சகோதர, சகோதரிகளே….! 2024-இல் நீங்கள் ஒழித்துக் கட்ட வேண்டியது DMK . அவர்கள் சொன்னார்கள்… உதயநிதி ஸ்டாலின் என்ன சொன்னாரு ? கொசு என எதோ சொன்னாரா ? DMK_வை ஒழிச்சு கட்டுனா… DMK ( D-டெங்கு, M – மஸ்கிட்டோ, K-கொசு) எனவே சனாதன தர்மம் டெங்கு, கொசு இல்லைங்க.. DMK தான் … டெங்கு, மஸ்கிட்டோ, கொசு. அதை 2024இல் நீங்கள் முற்றிலுமாக ஒழித்துக் கட்ட வேண்டும் என தெரிவித்தார்.
