செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இதே மாதிரி ஒரு பெண் ஒரு ஆணோட வாழ்ந்துட்டு இருக்கும்போது…  இந்த பொண்ணு என்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு அப்ப சொன்னா… ஆனா வேற ஒருத்தனா கட்டிக்கிட்டு போயிட்டான்னு….  என நான் உங்கள எல்லாம் கூட்டிட்டு ”போயிட்டா”  அப்படி சொன்ன என்னை செருப்பு கழட்டி அடிக்க மாட்டீங்க. அது எப்படி ரசிக்க முடியுது ?  உங்களால…

ஒரு குடும்பம் வச்சு… இரண்டு மகன்கள் வச்சிட்டு… இவ்ளோ பெரிய சொந்தங்கள வச்சுக்கிட்டு… உலகம் பூரா சொந்தங்கள வச்சுக்கிட்டு.. அக்கா – தங்கச்சி. அண்ணன் –  தம்பியோட பொறந்த ஒருத்தன், மாமன் -மச்சான்னு ஒரு பெரிய குடும்பம்…. ஒரு சமூக மரியாதையை சம்பாதித்து வைத்திருக்கிறவன… போற போக்குல,  இவன் பொறுக்கி.

இதெல்லாம் என்னது பேச்சு ? இத நீங்களும்… ஊடகங்களும்…  ஒரு செய்தியா உங்களுக்கு ? ஆகப்பெரும் செய்திகளை நான் சொன்னேன். அந்த செய்தியோட தான் என்கிட்ட மோதணும்.  சமூகத்துக்கு எது தேவைன்னு பாக்கணும் ? நீங்க கக்கூஸ்க்குள்ளே குடியிருப்பீங்கன்னா…  நான் ஒன்னும் பண்ண முடியாது. குப்பை மேட்டுல தான் நான் குடியிருப்பேன்னா….  ஒன்னும் சொல்ல முடியாது.

நீங்க அசிங்கங்களை தோண்டி,  தோண்டி மோந்து பார்ப்பீர்கள் என்றால் ? அது கேவலம். நீங்க எப்பவும் என்ன பண்றீங்கன்னா…  அறிவார்ந்த தளத்துக்கு மக்களை நகர்த்துவது இல்லை. மீடியாக்கள் நீங்க என்ன பண்றிங்க ? மறுபடியும் புரளி பேசுறீங்க… கிசுகிசு பேசுறீங்க… அவதூறுகளை பெரிய அறிக்கையாக கொண்டு வரீங்க. அதுவே ஆகப்பெரும் செய்தி ஆக்குறீங்க. இது ஒரு கேவலம். அத முதல்ல நிறுத்துங்க.  நீங்க அதை நிறுத்துங்க என தெரிவித்தார்.