கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாங்காடு சப்பாத்து பாலம் உள்ளிட்ட பகுதிகளை ஆய்வு செய்து மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தி உள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கூறியதாவது, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 வட்டங்களிலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள் குறித்து அறிக்கை அளிக்குமாறு மண்டல அலுவலர்கள் மற்றும் வட்டாட்சியர்கள் உள்ளிட்ட வருவாய் துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தற்காலிகமாக மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மணல் மூட்டைகள் அடுக்கவும், வாய்க்கால்கள், ஓடைகள் நீர் நிலைகளில் உள்ள குப்பைகள், மரக்கிளைகள், செடிகளை அகற்றவும் பொதுப்பணித்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. சுமார் 553 நபர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.