தூத்துக்குடியில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், அமைச்சர் மா.சுப்பிரமணியன் அமைச்சர் தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி கருணாநிதி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில் பேசிய  தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்,  மருத்துவக்குழுக்கள் எந்த இடதுக்கு போகலான்னு  சொன்னீங்கன்னா இப்பவே போக சொல்லலாம்.. முத்தம்மாள்  காலனி மூணு தடவை போயிட்டு வந்தாங்க…

எல்லா ஊர்லயும் ரோட்ல தான் வைக்கிறாங்க. உள்ள போய் வச்சா அது யாருக்கும் தெரியாது. பக்கத்து தெருவில் இருக்கிறவங்களுக்கு கூட தெரியாது.  ஊரோட கார்னர் பகுதியில் தான் வச்சிருக்காங்க….  நேத்து கூட சொன்னாங்க…. முக்காணியில் இல்லைன்னு சொன்னாங்க…  நாங்க அங்க 3 கேம்ப் போயிட்டு வந்துட்டாங்க….  எல்லா இடத்திலும் கேம்ப் போயாச்சு…..  இந்த ஏழு நாளில் இதுவரைக்கும் 3000க்கு மேல கேம்ப் நடத்தி இருக்கு.

ஒவ்வொரு நாளும் 600 அளவுல கேம்ப் நடத்துறாங்க. மருத்துவத்துறையில் அதிக முகாம்கள் நடத்தணும். அதனால தான்  வேற மாவட்டங்களில் இருந்து கூட நடமாடும் மருத்துவ வாகனங்கள்….  அதில் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர்,  ஒரு சுகாதார ஆய்வாளர்,  ஒரு உதவியாளர் என்று நான்கு பணியாளர்களுடன்  190 வாகனங்கள் இருக்கு… கன்னியாகுமரியிலும்,  தென்காசியும் இயல்பு நிலைக்கு வந்துட்டதால் அந்த வாகனமும் இப்பொழுது தூத்துக்குடியில் தான் வேலை செய்றாங்க…

நீங்க பார்த்திருக்கலாம்….  எல்லா இடத்திலும் நடமாடும் மருத்துவ வாகனம் நின்னுட்டு இருக்கு… நிறைய பண்ணிட்டு இருக்கு….  இன்னும் உங்க பார்வைக்கு எங்கேயாச்சும் தெரிஞ்சு,  ஒரிஜினலா…  நிறையா வதந்திகள் கிளப்பி விடுவாங்க…. அந்த ஏரியாக்கு வரவே இல்ல….. இந்த ஏரியாக்கு வரவே இல்ல என சொல்லுவாங்க… ஆனால் எல்லா ஏரியாவுக்கும் போயிருக்கு… எங்கையாவது அந்த மாதிரி இருந்தது  சொன்னீங்கன்னா…. உறுதியா ஒரு மணி நேரத்துக்குள்ள அங்கு முகாம்   அனுப்பிடலாம். மாப்பிளையூரணி போயிருக்கு… பூதூர் பாண்டியாபுரம் போயிருக்குன்னு சொல்லுறாங்க நாங்க  ஃபாலோ பண்ணிக்கிறோம் என தெரிவித்தார்.