உத்திரபிரதேசம் மாநிலத்தில் நேற்று நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில் இஸ்லாமியர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்திய வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.  அவர்கள் வைத்திருந்த வாக்காளர் அடையாள அட்டை ஆனது செல்லாது என்று கூறி அவர்களை காவல்துறையினர் விரட்டி அடித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. உத்திரபிரதேசத்தில் சாம்பல் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஒவாரி என்ற கிராமத்தில் தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளதாக சமூக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

வாக்காளர் அட்டை செல்லாது என்று கூறி திருப்பி அனுப்ப போலீசார் முயற்சித்ததால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமியர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இதனை எடுத்து அந்த இஸ்லாமியர்களை விரட்டி விரட்டி காவல்துறையினர் அடித்துள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். பெண்களும் குழந்தைகளும் கூட இந்த தடியடியில் இருந்து தப்பிக்க வில்லை என்று கூறப்படுகிறது.