மதுரை மாவட்டத்திலுள்ள ஒத்தக்கடை சந்திப்பு அருகே அதிகாலை ஒரு வேன் சென்று கொண்டிருந்தது. அந்த வேனில் தமிழ்நாட்டை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு சென்று சாமி கும்பிட்டு விட்டு மீண்டும் சொந்த ஊருக்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது திருச்சி நோக்கி சென்ற லாரி எதிர்பாராதவிதமாக வேன் மீது நேருக்கு நேர் மோதியது.

இந்த விபத்தில் ஐயப்ப பக்தர்கள் 5 பேர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயமடைந்த 5  பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.