கன்னியாகுமரி மாவட்டத்திற்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். அவர்கள் மாத்தூர் தொட்டில் பாலம், திற்பரப்பு அருவி, பத்மநாதபுரம் அரண்மனை உள்ளிட்ட சுற்றுலா தலங்களை பார்த்து ரசிக்கின்றனர். தற்போது கன்னியாகுமரிக்கு ஐயப்ப பக்தர்களின் வருகையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் விவேகானந்தர் மண்டபத்தை பார்ப்பதற்கு படகு போக்குவரத்து தொடங்குவதற்கு முன்பாகவே ஏராளமான வரிசையில் காத்து நிற்கின்றனர்.

தற்போது பராமரிப்பு மற்றும் பாலம் பணிகள் நடைபெறுவதால் திருவள்ளுவர் சிலையை பார்க்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை. இந்நிலையில் கடற்கரையை ஒட்டி கடல் நடுவே இருக்கும் ஆபத்தான பாறைகளுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை. ஆனால் ஆபத்தை உணராமல் சிலர் பாறையில் அமர்ந்தும், நின்று கொண்டும் செல்போனில் செல்பி எடுக்கின்றனர். எனவே தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு அத்துமீறும் நபர்களை தடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.