2023 ஐசிசி உலகக் கோப்பைக்கான 10 அணிகளில் யார் யார் இடம்பெற்றுள்ளார்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

2023 ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை இந்தியாவில் அக்டோபர் 5 முதல் நவம்பர் 19 வரை நடைபெறவுள்ளது. இந்த மெகா தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து  10 அணிகள்  பங்கேற்றுள்ளன. கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்த வெஸ்ட் இண்டீஸ் அணி தகுதி சுற்றில் தோல்வியடைந்து வெளியேறியது அனைவரும் அறிந்ததே.

மேலும் அனைத்து அணிகளும் முன்கூட்டியே தங்கள் வீரர்களை அறிவித்துள்ளன. நேற்று அனைத்து அணிகளுக்கும் இறுதி செய்ய கடைசி நாளாக (செப்டம்பர் 28ஆம் தேதி) ஐசிசி அறிவித்தது. அதன்படி இந்திய அணியில் அக்சருக்கு பதிலாக அஸ்வின் சேர்க்கப்பட்டார். அதேபோல ஆஸ்திரேலிய அணியில் மார்னஸ் லாபுஷாக்னே, டிராவிஸ் ஹெட் ஆகியோர் இணைந்தனர்.

அக்டோபர் 5 ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் தொடக்க ஆட்டம் நடைபெறுகிறது. நடப்பு சாம்பியனான இங்கிலாந்து மற்றும் ரன்னர்-அப் நியூசிலாந்து இடையேயான போட்டியுடன் உலகக் கோப்பை தொடங்குகிறது. இந்தியா தனது உலகக் கோப்பை பயணத்தை அக்டோபர் 8 முதல் தொடங்குகிறது. இந்தப் போட்டி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே நடைபெறும். இந்த தொடரில்  அனைவருக்கும் ஆர்வமாக இருக்கும் இந்தியா-பாகிஸ்தான் போட்டி அக்டோபர் 14 ஆம் தேதி நடைபெற உள்ளது.

தற்போது இன்று (செப்டம்பர் 29) முதல் திருவனந்தபுரம், ஹைதராபாத் மற்றும் கவுகாத்தி ஆகிய 3 மைதானங்களில்  தொடர் பயிற்சி ஆட்டங்கள் நடைபெறும். ஒவ்வொரு அணியும் 2 முறை பயிற்சி ஆட்டங்களில் விளையாடும். இன்று இலங்கை மற்றும் வங்கதேசம், தென்னாப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் பயிற்சி ஆட்டத்தில் மோதுகிறது. இந்நிலையில் 10 அணிகளிலும் இடம்பெற்றுள்ள வீரர்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்..

10 உலகக் கோப்பை அணிகளின் பட்டியல் :

2023 ஒருநாள் உலகக் கோப்பைக்கான ஆப்கானிஸ்தான் அணி :

ஹஷ்மத்துல்லா ஷாஹிதி (கே), ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் சத்ரான், ரியாஸ் ஹசன், ரஹ்மத் ஷா, நஜிபுல்லா ஜத்ரான், முகமது நபி, இக்ராம் அலிகில், அஸ்மத்துல்லா உமர்சாய், ரஷித் கான், முஜீப் உர் ரஹ்மான், நூர் அகமது, ஃபசல்ஹக் ஃபரூக்கி, அப்துல் ரஹ்மான், நவீன் உல் ஹக்.

2023 ஒருநாள் உலகக் கோப்பைக்கான ஆஸ்திரேலியா அணி :

பாட் கம்மின்ஸ் (கே), ஸ்டீவ் ஸ்மித், அலெக்ஸ் கேரி, ஜோஷ் இங்கிலிஸ், சீன் அபோட், மார்னஸ் லாபுஷாக்னே, கேமரூன் கிரீன், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், மிட்ச் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், டேவிட் வார்னர், ஆடம் ஜம்பா, மிட்செல் ஸ்டார்க்.

2023 ஒருநாள் உலகக் கோப்பைக்கான வங்கதேச அணி :

ஷாகிப் அல் ஹசன் (கே), லிட்டன் குமர் தாஸ், தன்சித் ஹசன் தமீம், நஜ்முல் ஹொசைன் சாண்டோ (து.கே), தவ்ஹித் ஹ்ரிடோய், முஷ்பிகுர் ரஹீம், மஹ்முதுல்லா ரியாத், மெஹிதி ஹசன் மிராஸ், நசும் அகமது, ஷக் மஹேதி ஹசன்,
தஸ்கின் அகமது, முஸ்தாபிசுர் ரஹ்மான், ஹசன் மஹ்மூத், ஷோரிஃபுல் இஸ்லாம், தன்சிம் ஹசன் சாகிப்.

2023 ஒருநாள் உலகக் கோப்பைக்கான இங்கிலாந்து அணி :

ஜோஸ் பட்லர் (கே), மொயின் அலி, கஸ் அட்கின்சன், ஜானி பேர்ஸ்டோவ், சாம் கர்ரன், லியாம் லிவிங்ஸ்டோன், டேவிட் மலான், அடில் ரஷித், ஜோ ரூட், ஹாரி புரூக், பென் ஸ்டோக்ஸ், ரீஸ் டாப்லி, டேவிட் வில்லி, மார்க் வூட், கிறிஸ் வோக்ஸ்.

2023  ஒருநாள் உலகக் கோப்பைக்கான இந்திய அணி :

ரோஹித் சர்மா (கே), ஹர்திக் பாண்டியா (து.கே), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், குல்தீப் யாதவ், முகமது ஷமி, ஆர். அஷ்வின், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ்.

2023  ஒருநாள் உலகக் கோப்பைக்கான நெதர்லாந்து அணி :

ஸ்காட் எட்வர்ட்ஸ் (கே), மேக்ஸ் ஓ’டவுட், பாஸ் டி லீட், விக்ரம் சிங், தேஜா நிடமானுரு, பால் வான் மீகெரென், கொலின் அக்கர்மேன், ரோலோஃப் வான் டெர் மெர்வே, லோகன் வான் பீக், ஆர்யன் தத், ரியான் க்ளீன், வெஸ்லி பர்ரேசி, சாகிப் சுல்பிகார், ஷரிஸ் அஹ்மத், சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட்.

2023  ஒருநாள் உலகக் கோப்பைக்கான நியூசிலாந்து அணி :

கேன் வில்லியம்சன் (கே), டிரென்ட் போல்ட், மார்க் சாப்மேன், டெவோன் கான்வே, லாக்கி பெர்குசன், மேட் ஹென்றி, டாம் லாதம், டேரில் மிட்செல், ஜிம்மி நீஷம், க்ளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, மிட்ச் சான்ட்னர், இஷ் சோதி, டிம் சவுத்தி, வில் யங்.

2023  ஒருநாள் உலகக் கோப்பைக்கான பாகிஸ்தான் அணி :

பாபர் அசாம் (கே), ஷதாப் கான், ஃபகார் ஜமான், இமாம்-உல்-ஹக், அப்துல்லா ஷபீக், முகமது ரிஸ்வான், சவுத் ஷகீல், இப்திகார் அகமது, சல்மான் அலி ஆகா, முகமது நவாஸ், உசாமா மிர், ஹரிஸ் ரவுஃப், ஹசன் அலி, ஷஹீன் அப்ரிடி, முகமது வாசிம்.

2023  ஒருநாள் உலகக் கோப்பைக்கான தென்னாப்பிரிக்க அணி :

டெம்பா பவுமா (கே), ஜெரால்ட் கோட்ஸி, குயின்டன் டி காக், ரீசா ஹென்ட்ரிக்ஸ், மார்கோ ஜான்சன், ஹென்ரிச் கிளாசென், கேசவ் மகராஜ், ஐடன் மார்க்ரம், டேவிட் மில்லர், லுங்கி என்கிடி, ஆண்டிலே பெஹ்லுக்வாயோ, ககிசோ ரபாடா, தப்ரைஸ் ஷம்சி, ரஸ்ஸி வான் டெர் டுசென், லிசாட் வில்லியம்ஸ்.

2023  ஒருநாள் உலகக் கோப்பைக்கான இலங்கை அணி :

தசுன் ஷானகா (கே), குசல் மெண்டிஸ் (து.கே), குசல் பெரேரா, பதும் நிஷாங்கா, திமுத் கருணாரத்ன, சதீர சமரவிக்ரம, சரித் அசலங்கா, தனஞ்சய டி சில்வா, துஷான் ஹேமந்த, மஹீஷ் தீக்ஷன, துனித் வெல்லலகே, கசுன் ராஜித, மதீஷ பத்திரனா, லஹிரு குமாரா, டில்ஷான் மதுஷங்கா.

காத்திருப்பு வீரர் : சாமிக்க கருணாரத்ன