விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான குக் வித் கோமாளி நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் ஆரம்பமாக உள்ள நிலையில் சமையல் கலைஞர்களான தாமு மற்றும் வெங்கடேஷ் பட் இருவரும் நிகழ்ச்சியில் இருந்து விலகினர். இந்த நிலையில் குக் வித் கோமாளி தயாரிப்பு நிறுவனமும் விலகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக ரவூஃபா வெளியிட்டுள்ள பதிவில், சுமார் 25 ஆண்டுகளாக நாங்கள் விஜய் டிவியில் மட்டுமே பணியாற்றினோம். இது எங்களுடைய இரண்டாவது வீடு என்று கருதி வந்தோம். இப்போது விஜய் டிவியில் இருந்து பிரிய வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம் என ஒரு பதிவை பகிர்ந்துள்ள நிலையில் அந்த பதிவு வைரல் ஆகி வருகிறது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Ravoofa H.k இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@ravoofa.h.k)