விஜய் டிவியில் பிரபலமான சீரியல்களில் ஒன்றான சிறகடிக்க ஆசை என்ற சீரியலில் மீனா கதாபாத்திரத்தில் நடிகை கோமதி பிரியா நடித்து வருகின்றார். ஏழை குடும்பத்து பெண்ணான மீனா புகுந்த வீட்டில் அனுபவிக்கும் கஷ்டம் ஒரு பக்கம் இருந்தாலும் பிடிக்காத கணவரை திருமணம் செய்து கொண்டு பிறகு ஏற்பட்ட காதல் என்று கதைக்களம் சென்று கொண்டிருக்கிறது.

இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்த நிலையில் நடிகை கோமதிப்பிரியா தற்போது இன்ஸ்டாகிராமில் கண் கலங்கியபடி வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், மிக அருகினில் இருந்தும் தூரம் இது என குறிப்பிட்டு தான் பிரிந்து இருக்கும் நெருக்கமான ஒருவரை நினைத்து வருத்தத்தில் இருப்பதாக அவர் கூறியுள்ளார். இதனை பார்த்து ரசிகர்கள் நடிகைக்கு என்ன ஆச்சி என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Gomathi Priya இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@priyabalakumaran_gp)