2015 ஆம் ஆண்டிற்கான திரைத்துறை கலைஞர்களுக்கான தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது..

2015 ஆம் ஆண்டின் சிறந்த திரைப்படத்திற்கான தமிழ்நாடு அரசின் முதல் பரிசு ‘தனி ஒருவன்’ படத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த படத்திற்கான இரண்டாவது பரிசு பசங்க 2 மற்றும் மூன்றாவது பரிசு பிரபா படத்திற்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு படத்திற்கான சிறப்பு பரிசு ‘இறுதிச்சுற்று’ மற்றும் பெண்களைப் பற்றி உயர்வாக சித்தரிக்கும் படம் சிறப்பு பரிசு 36 வயதினிலே.

2015 ஆம் ஆண்டின் சிறந்த நடிகருக்கான தமிழ்நாடு அரசின் விருதுக்கு நடிகர் மாதவன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ‘இறுதிச்சுற்று’ படத்திற்காக நடிகர் மாதவனுக்கு சிறந்த நடிகருக்கான தமிழ்நாடு அரசின் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

2015 ஆம் ஆண்டின் சிறந்த நடிகைக்கான தமிழ்நாடு அரசின் விருதுக்கு நடிகை ஜோதிகா தேர்வு செய்யப்பட்டுள்ளார்
36 வயதினிலே படத்திற்காக நடிகை ஜோதிகாவிற்கு சிறந்த நடிகைக்கான தமிழ்நாடு அரசின் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சிறந்த நடிகர் நடிகைக்கான சிறப்பு பரிசு கௌதம் கார்த்திக் (வை ராஜா வை), ரித்திகா சிங்கிற்கு (இறுதிச்சுற்று) அறிவிக்கப்பட்டுள்ளது. ‘தனி ஒருவன்’ படத்திற்காக நடிகர் அரவிந்த்சாமிக்கு சிறந்த வில்லன் நடிகருக்கான விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

2015 ஆம் ஆண்டின் சிறந்த இயக்குனருக்கான தமிழ்நாடு அரசின் விருது சுதா கொங்கராவிற்கு ‘இறுதிச்சுற்று’ அறிவிக்கப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டின் சிறந்த கதை ஆசிரியருக்கான தமிழ்நாடு அரசின் விருது மோகன் ராஜாவிற்கு தனி ஒருவன் அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருது சிங்கம்புலி (அஞ்சுக்கு ஒண்ணு), சிறந்த நகைச்சுவை நடிகைக்கான விருது தேவதர்ஷினி (திருட்டுக் கல்யாணம் /36 வயதினிலே), சிறந்த குணசித்திர நடிகர் தலைவாசல் விஜய் (அபூர்வ மகான்) சிறந்த குணச்சித்திர நடிகையாக கௌதமி (பாபநாசம்) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

சிறந்த இசையமைப்பாளருக்கான தமிழ்நாடு அரசின் விருதுக்கு ஜிப்ரான் (உத்தம வில்லன்/ பாபநாசம்) தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிறந்த பாடலாசிரியர் விவேக் (36 வயதினிலே), சிறந்த பின்னணி பாடகர் கானா பாலா (வை ராஜா வை), சிறந்த பின்னணி பாடகி கல்பனா ராகவேந்தர் (36 வயதினிலே) தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிறந்த ஒளிப்பதிவாளராக ராம்ஜி (தனி ஒருவன்) தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.

விருதுக்கு தேர்வான திரைத்துறை கலைஞர்களுக்கு அமைச்சர் மு.பே சாமிநாதன் விருதுகள் வழங்கி சிறப்பிக்கிறார். தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் வழங்கும் விழா மார்ச் 6ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.