இந்திய காப்பீட்டு ஒழுங்கு முறை மற்றும் மேம்பாட்டு ஆணையம்(ஐஆர்டிஏஐ) ஆயுள் காப்பீட்டு பாலிசிகளுக்கு எதிராக பெற்ற கடன்களை கிரெடிட்கார்டு வாயிலாக திருப்பி செலுத்தும் வசதியை நிறுத்த முடிவுசெய்திருக்கிறது. ஐஆர்டிஏஐ என்பது இந்திய அரசின் நிதியமைச்சகத்தின் அதிகார வரம்பிற்குட்பட்ட ஒரு சட்டப்பூர்வ அமைப்பு ஆகும்.

இது இந்தியாவில் காப்பீடு மற்றும் மறு காப்பீட்டு தொழில்களை ஒழுங்குபடுத்துதல் மற்றும் உரிமம் வழங்குதல் உள்ளிட்ட பணிகளை செய்து வருகிறது. கடந்த மே மாதம் 4-ஆம் தேதி வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின் படி, காப்பீட்டு கொள்கைகளுக்கு எதிராக வழங்கப்பட்ட கடன்களை மீண்டுமாக செலுத்துவதற்கு கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்வதை நிறுத்தும்படி அனைத்து ஆயுள் காப்பீட்டாளர்களுக்கும் காப்பீட்டு கட்டுப்பாட்டாளர் அறிவுறுத்தி இருக்கிறார் என குறிப்பிடப்பட்டுள்ளது. கிரெடிட் கார்டுகள் வாயிலாக பெறப்படும் வாடகை பணம் செலுத்துவதற்கான செயலாக்க செலவு கடந்த நவம்பரில் எஸ்பிஐ கார்டுகளால் ரூபாய்.99 மற்றும் GST என 18% விகிதத்தில் உயர்த்தப்பட்டது.