வெளிநாடுகளில் இருந்து ஒரு கிலோ ரூ.50-க்கு கீழே உள்ள விலை கொண்ட ஆப்பிள் பழங்களை இறக்குமதி செய்ய இந்தியா தடை விதித்துள்ளது.

இது தொடர்பான வெளியான அறிக்கையில், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஆப்பிள்களின் CIF விலை கிலோ ஒன்றுக்கு ரூ.50ஐ விட குறைவாக இருந்தால், இறக்குமதி தடை பொருந்தும். 2023ல் இதுவரை 296 மில்லியன் டாலர் மதிப்பிலான ஆப்பிள்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. கிலோவுக்கு ரூ.50-க்கு கீழே அல்லது அதற்கு சமமான விலை கொண்ட பழங்களை இறக்குமதி செய்ய தடை விதிக்கப்படுவதாக அரசு உத்தரவிட்டுள்ளது.

பூட்டானில் இருந்து குறைந்த விலையில் இறக்குமதி செய்வதற்கு தடை கிடையாது என்றும் அந்நாட்டிற்கு மட்டும் விலக்கு அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆப்பிள் அதிகளவு இறக்குமதி செய்வது தங்கள் வாழ்வாதாரத்தை பாதிப்பதாக இந்திய ஆப்பிள் விவசாயிகள் புகார் அளித்திருந்த நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.