கரியமில வாயுவை குறைக்கும் வகையில் டெல்லி நகரில் 4 சக்கர டீசல் வாகனங்களை  முழுவதுமாக  தடை செய்ய மத்திய அரசு நியமித்த ஆலோசனைக் குழு பரிந்துரைத்துள்ளது. அதன்படி, 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்களில் 2027ஆம் ஆண்டுக்குள் டீசல் வாகனங்களுக்கு முழுமையான தடை விதிக்க வேண்டும்.

இவற்றுக்கு பதிலாக மின்சாரம் மற்றும் எரிவாயு மூலம் இயங்கும் வாகனங்களைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்க வேண்டும்” என ஆற்றல் பரிமாற்றக் குழு அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது. நகரங்களில் இயக்கப்படும் டீசல் பேருந்துகள் 2024ஆம் ஆண்டுக்குள் படிப்படியாக நிறுத்தப்படும். 2030ஆம் ஆண்டுக்குள் மின்சாரம் அல்லாத நகரப் பேருந்துகளை அனுமதிக்கக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது.