சென்ற நிதி ஆண்டில் ரயில்வே 8 வந்தே பாரத் ரயில்களை வழித்தடங்களில் துவங்கியுள்ளது. அதிலும் குறிப்பாக பயணிகளின் வசதிகளுக்கு பல்வேறு புதிய ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் மாற்றுத்திறனாளிகள், மூத்தக்குடிமக்கள் போன்றோருக்கு டிக்கெட் தொகையில் தள்ளுபடி அளிப்பது மட்டுமல்லாமல் முன்பதிவில் முன்னுரிமை, ஒதுக்கப்படும் இருக்கைகளின் முன்னுரிமை என பல சேவைகள் இருக்கிறது.
இந்நிலையில் தெற்கு ரயில்வேயிலிருந்து கிடைத்த தகவலின் படி, ரயில்வேயின் வருவாய் சுமார் 80% அதிகரித்து உள்ளது. அதோடு 2022-23 நிதி ஆண்டில் பயணிகள் பிரிவு ரூ.6345 கோடி வருவாய் ஈட்டி இருக்கிறது. அதன்படி இதுவே இதுவரையிலும் கிடைத்த அதிகபட்ச வருமானம் ஆகும். இத்தகைய சூழலில் மூத்தக்குடிமக்களுக்கான கட்டணச் சலுகையை ரயில்வே மீண்டுமாக தொடங்கலாம் என சொல்லப்படுகிறது.