நம் நாட்டில் ரயில் நிலையமானது ஒவ்வொரு மூலையிலும் இருக்கிறது. தினசரி லட்சக்கணக்கான மக்கள் ரயிலில் பயணம் மேற்கொள்கின்றனர். இதனிடையே வித்தியாசமான ரயில் நிலையம் ஒன்று இருக்கிறது. இந்த ரயில் நிலையமானது 2 மாநிலங்களில் அமைந்திருக்கிறது. இங்கே ரயில் நிற்கும் போது ரயிலின் இன்ஜின் உடன் இணைந்த 1 பாதி ஒரு மாநிலத்திலும் ரயிலின் மற்றொரு பாதி வேறு மாநிலத்திலும் நிற்கும்.

இது பவானி மண்டி ரயில் நிலையமாகும். மேலும் இது மத்தியபிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய 2 மாநிலங்களில் அமைந்திருக்கிறது. பயணிகள் முதல் விரைவு மற்றும் சில அதி விரைவு ரயில்களானது இங்கு நிற்கிறது. ரயில் நிலையத்தில் ஒரு நடை மேடையிலிருந்து மற்றொரு நடைமேடைக்கு செல்ல பாலமும் இருக்கிறது. இங்கு 2 நடைமேடைகள் மட்டுமே இருக்கிறது. இரு மாநில பயணிகளும் இங்கு இருந்து பயணம் மேற்கொள்கின்றனர்.

இரு மாநிலங்களிலிருந்தும் தினமும் பணிக்காக மக்கள் அதிகம் பயணம் செய்வதால் இந்த பவானி மண்டி நிலையத்தில் எப்போதும் கூட்டம் காணப்படுகிறது. பவானி மண்டி ரயில் நிலையம் ராஜஸ்தானின் பலகை ரயில் நிலையத்தின் ஒரு முனையிலும், மத்தியப்பிரதேசம் மாநிலத்தின் பலகை மறுமுனையிலும் நிறுவப்பட்டுள்ளது.